‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கிய ரஞ்சித் தனது மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றார். எனவே தற்போது ரஜினியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ‘கபாலி’ படத்தை படுவேகமாக இயக்கி வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளதாக தெரிகிறது. 

இப்படம் தொடங்கி இன்னும் 50% கூட எட்டாத நிலையில் தற்போதே விநியோக உரிமை கொடிகட்டிப் பறக்கிறதாம். இதன் அமெரிக்க வெளியீட்டு உரிமையை சினி கேலக்ஸி என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதனையடுத்து தனுஷ் நடித்து வேல்ராஜ் இயக்கியுள்ள ‘தங்க மகன்’ படத்தின் வியாபாரமும் தற்போது விறுவிறுப்பாக தொடங்கியுள்ளதாம். விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படத்தை தயாரித்த ஸ்ரீ க்ரீன் புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனம்தான் ‘தங்கமகன்’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற முயற்சித்து வருகிறதாம். விரைவில் இந்த இரு படங்களில் வியாபாரம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Top