ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார் இசையமைப்பாளர் அனிருத்.  ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய இப்படத்தில் தனுஷ், ஸ்ருதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  இப்படம் வெளியாகும் முன்பே இப்பாடலை யூட்யூபில்வெளியிட்டனர்.
இன்று வரை இப்பாடலை பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். விரைவில் இது நூறு மில்லியனை தொடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுவேஉலகளவில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படும்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளியானமாரி’ படத்தில் இடம்பெற்ற ‘டானு டானு…’ பாடலும் யூட்யூப் தளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
எனவே இவர்கள் கூட்டணியில் வரும் பாடல்களுக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் விரைவில் வரவிருக்கும் ‘விஐபி 2′ பாடல்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுவும் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment

 
Top