இந்தியாவின் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஆகியோரை உரிமையாளர்களாக கொண்டது சென்னையின் எப்.சி. கால்பந்து அணி. தற்போது இந்த அணிக்கு தமிழகத்தின் பிராண்ட் அம்பாசடராக தனுஷ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இவர் சென்னை அணியின் விளம்பரத்தூதராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கால்பந்து போட்டியையும், லீக்கையும் ப்ரமோட் செய்வார் என்றும் தமிழகம் முழுவதும் இந்த கால்பந்து விளையாட்டு போட்டிகள் சென்றடைய வழிவகுப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் சென்னை அணியின் சீருடை அணிந்து போட்டி நடைபெறும்போது ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிராண்ட் அம்பாசடர் தனுஷ் கூறியதாவது…”இந்த கால்பந்து போட்டிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாகிய எனக்கு பிராண்ட் அம்பாசடர் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. நம் தமிழ் மொழியில், நம் தமிழ்நாட்டில் இப்போட்டியை பிரபலப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
வருகிற அக்டோபர் 3ஆம் தேதி முதல் போட்டி நடைபெறவுள்ளது. அப்போது சென்னையின் எப்.சி அணியுடன் நடப்புச் சாம்பியனான ஆட்லெடிகோ டி கொல்கத்தா அணி மோதவுள்ளது. இது அன்று மாலை 6.45 மணியளவில் ஸ்டார் மேக்ஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் டிவியில் நேரலையாக ஒளிப்பரப்பாகிறது.
0 comments:
Post a Comment