நடிகர் தனுஷ், விரைவில் தொடங்கவிருக்கும் இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரை உரிமையாளர்களாகக் கொண்ட சென்னையின் எப்.சி. கால்பந்து அணி பங்குபெறும் அனைத்து போட்டியிலும் இவர் கலந்துகொண்டு ஆட்டத்தைப் பிரபலப்படுத்துவார்.
இதுகுறித்து தனுஷ் பேசுகையில், ” சின்ன வயதில் இருந்தே நான் தீவிர கால்பந்து ரசிகன். 90 நிமிடங்களில் விறுவிறுப்பாக நடக்கும் இந்த போட்டியினால் நீங்கள் ஒருநாள் முழுக்க டிவிக்கு முன் உட்கார்ந்து உங்கள் நேரத்தை வீணாக்க தேவையில்லை. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான புதிய பிளேயர்கள் இடம்பெறுவதால் இந்த சீசன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்றார்.
0 comments:
Post a Comment