வேல்ராஜ் இயக்கத்தில் ‘தங்கமகன்‘ மற்றும் பிரபுசாலமன்இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக ஒரு படம் என இரு படங்களை முடித்துவிட்டு தன் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் தனுஷ்.
‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்தனுஷ். இதில் முதல் முறையாக இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். ஒருவருக்கு ஜோடியாக அஜித்தின் மச்சினி ஷாம்லி நடிக்கிறார்.
இந்நிலையில் இன்னொரு தனுஷுக்கு ஜோடி தேடும் படலம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. பாலிவுட் புகழ் வித்யாபாலன் நடிக்கக்கூடும் என்று கூறிவந்த நிலையில் தற்போது த்ரிஷா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இது முற்றிலும் நெகட்டிவ்வான ரோல் என தெரிய வந்துள்ளது. அதாவது ‘படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘நீலாம்பரி’ கேரக்டர் போல் பவர்ஃபுல்லானது என கூறப்படுகிறது. எனவே இப்படம் மூலம் தனுஷ் த்ரிஷா முதன்முறையாக இணையவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தனுஷின் தந்தையாக விஜய்யின் தந்தை இயக்குனர் ஏஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற நவம்பர் 1ஆம் தேதி அன்று தொடங்கவிருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Top