நாம் முன்பே கூறியது போல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் காத்திருப்பது போல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கும் காத்திருக்கின்றனர். இதில் இயக்குனர் மணிரத்னம் முக்கியமானவர். இவரின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கு காத்திருக்கின்றனர்.
இப்புதிய படம் பற்றிய நிறைய செய்திகள் சில நாட்களாகவே வந்தன. கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்ற செய்திகள் வந்தது. பின்னர் இவர்கள் அனைவரும் விலகிவிட்டனர் என்ற செய்தியைத் தொடர்ந்து ‘நான் ஈ’ புகழ் நானி மற்றும் நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் நடிக்கிறார் என்ற செய்தியும் வந்தது. ஆனால் தற்போது மணிரத்னம் எதிர்பார்க்கும் நடிகர், நடிகைகள் கிடைக்காத காரணத்தினால் அந்தப் படத்தையே கைவிட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது.
எனவே வேறு ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாராம் மணிரத்னம். இதில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. எனவே, விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் என தெரிகிறது.
0 comments:
Post a Comment