‘அனேகன்’ மற்றும் ‘மாரி’ படங்களைத் தொடந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்க மகன்’ டிசம்பர் 18இல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் வெளியாகும். இதனைத் தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கக்கூடும் எனத் தகவல்கள் வந்துள்ளன. 

இதனிடையில் தனுஷ் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது. மணிகண்டன் இயக்கிய இப்படம் விமர்சர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மணிகண்டன் கதை, வசனம் எழுதிய ’கிருமி’ படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் மணிகண்டன். அதன்பின்னர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் இவர். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போதே துவங்கிவிட்டது கவனிக்கத்தக்கது.  follow

0 comments:

Post a Comment

 
Top