அனிருத்… இன்றைய தமிழ் ஹீரோக்களின் மோஸ்ட் வாண்டன்ட் மியூசிக் டைரக்டர் இவர்தான். விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் தெலுங்கு படங்களுக்கும் இசையமைக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் இசையமைத்துள்ள ‘வேதாளம்’ படத்தின் இசையை இணைய தளத்தில் நேற்று வெளியிட்டனர். பாடல்கள் அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால் படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது. மேலும் இது அனிருத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளதாம். அதற்கு முக்கிய காரணம் இன்று அவருடைய பிறந்த நாள்.
இந்நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனுஷ் தன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இவரது இசையில் சமீபத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ பாடல்களை கேட்ட இயக்குனர் ஷங்கரும் வாழ்த்தியுள்ளார். அதில்… “அனிருத் இசையில் வெளிவந்துள்ள அழகான ஆல்பம் இது. இதில் இடம்பெற்ற ‘நீயும் நானும்’, ‘காதல் என்பது மாயவலை’ உள்ளிட்ட பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top