கடந்த 2014 ஆம் வருடம் ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற ஒரு படத்தை மட்டுமே கொடுத்தார் தனுஷ். ஆனால் இவ்வருடம் இதுவரை ‘அனேகன்’, ‘ஷமிதாப்’, ‘மாரி’ என்ற மூன்று படங்களை கொடுத்துவிட்டார். தற்போது இவ்வருட இறுதிக்குள் நான்காவது படத்தையும் கொடுக்க முயன்று வருகிறார்.
தற்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ள ‘விஐபி-2’ படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தனுஷுடன், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளில் அதாவது அக்டோபர் 16ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தலைப்பை வெளியிடவிருக்கிறார்கள். இத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்துள்ளார். மேலும் தன் ரசிகர்களின் பொறுமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதே நாளில் அனிருத் இசையமைத்துள்ள அஜித்தின் ‘வேதாளம்’ பட ட்ரைலரும் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அஜித் படக்குழுவினரை ரசிகர்கள் நம்பத் தயாராக இல்லையாம். அது வரும்போது வரட்டும் என்று காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top