பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவந்த பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இப்படத்தில் அதிக VFX காட்சிகள் இடம்பெறுகிறதாம். இதை உருவாக்க மூன்றுமாத காலம் தேவைப்படுமாம். இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் காதலர் தின ஸ்பெஷலாக திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இப்படத்தில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதற்கிடையில் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ள தங்கமகன் படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top