கமல்ஹாசன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிவரும் படம் தூங்காவனம். இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா 07.10.2015 நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் பேசும் போது, “ தூங்காவனம் தமிழ்ப் படம் இல்ல, கமல் படம். உலக ரீதியாகத்தான் இருக்கும். இங்க வந்ததும் போட்டோவுக்கு நிற்கும் போது கமல்சார் பக்கத்துல நின்றுகொண்டிருந்தேன். அப்போ ஏன் கை கட்டி நிக்கிறீங்கன்னு கேட்டாரு, அது தானா கட்டிக்கிறது என்ன பண்ணமுடியும் என்று கூறினேன். அது தான் நாங்க உங்க மேல் வைத்திருக்கும் மரியாதை.

கடந்த சில வருடங்களாக சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெற்றுவருகிறேன். ஆனா உங்க கையால் சிறந்த நடிகருக்கான விருது வாங்கும் போது தான் நடிப்புக்கான முழுமை அன்று தான் எனக்கு நிறைவடையும். அது மட்டும் தான் என்னுடைய ஒரே ஆசை.

உங்களைப் பார்த்து நிறையக் கத்துக்கிட்டு, உங்களால் நாங்கள் பெயர்பெற்றுவருகிறேம் என்று நினைக்கையில் எனக்கு ரொம்பவும் சந்தோஷம் என்றார் தனுஷ். 

0 comments:

Post a Comment

 
Top