ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி தனுஷ் நடித்த ‘விஐபி-2’ படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தனுஷுடன், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தலைப்பை இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளில் அதாவது அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இப்படத்தின் கதை ரயிலில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளதால் தனுஷ் ரயில்வே ஊழியராக நடித்துவந்தார். இதன் படப்பிடிப்பு ஒரிசா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் தனுஷின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வில்லனாக ஹரீஷ் உத்தமன் நடித்துள்ளார். இவர் ‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் சிங் வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முழுவதுமாக முடிவடைந்தது என்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிரபு சாலமனிடம் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment